தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

First On:'தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவரும் கிடையாது... ஒற்றை இலக்க மாணவர்களைக்கொண்டு செயல்படும் 669 பள்ளிகள் - அதிர்ச்சி தகவல்!' - Government schools in TamilNadu

தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லாமலும், ஒற்றை இலக்க மாணவர்களோடு 669 பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும் கல்வித்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவரும் கிடையாது.. ஒற்றை இலக்க மாணவர்களில் செயல்படும் 669 பள்ளிகள் - கல்வித்துறை அதிர்ச்சி தகவல்!
தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவரும் கிடையாது.. ஒற்றை இலக்க மாணவர்களில் செயல்படும் 669 பள்ளிகள் - கல்வித்துறை அதிர்ச்சி தகவல்!

By

Published : Jun 2, 2022, 5:45 PM IST

Updated : Jun 2, 2022, 6:46 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் 2022 - 2023ஆம் கல்வியாண்டில் வருகிற ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், பள்ளிகளைத் திறக்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தொடக்கக் கல்வி இயக்குநர் இன்று (ஜூன் 2) ஆலோசனை நடத்தினார்.

அப்போது, “அரசுப் பள்ளிகளில் மாணவர்களை அதிகளவில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழுவின் உதவியுடன் வரும் 14ஆம் தேதி மாணவர்கள் சேர்க்கைப்பேரணியை நடத்திட வேண்டும். ஒரு மாணவரும் இல்லாத 22 பள்ளிகளில் 10 மாணவர்களை சேர்த்தால் 2 ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும். மேலும், ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள 669 பள்ளிகளிலும் இரட்டை இலக்கத்தில் மாணவர்களை சேர்க்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டது.

ஓரிலக்க கல்வித்துறை: தமிழ்நாட்டில் 22 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவரும், ஆசிரியர்களும் இல்லாமல் உள்ளனர். 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். ஒரு மாணவர் மட்டும் 11 பள்ளிகளிலும், இரண்டு மாணவர்கள் 24 பள்ளிகளிலும், மூன்று மாணவர்கள் 41 பள்ளிகளிலும், நான்கு மாணவர்கள் 50 பள்ளிகளிலும், ஐந்து மாணவர்கள் 77 பள்ளிகளிலும் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவரும் கிடையாது.. ஒற்றை இலக்க மாணவர்களில் செயல்படும் 669 பள்ளிகள் - கல்வித்துறை அதிர்ச்சி தகவல்!

அதேபோல், 114 பள்ளிகளில் ஆறு மாணவர்களும், 95 பள்ளிகளில் ஏழு மாணவர்களும், 104 பள்ளிகளில் எட்டு மாணவர்களும், 153 பள்ளிகளில் 9 மாணவர்களும் படித்து வருகின்றனர். மேலும், 3800 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 3,131 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு மேல் 60 மாணவர்களுக்குள் இருந்தும் தலைமை ஆசிரியர் மட்டுமே 5 வகுப்பிற்கான பாடங்களை நடத்தும் சூழ்நிலை உள்ளது.

தரமான கட்டமைப்பு வேண்டும்: இவ்வாறு இருக்கும் தலைமை ஆசிரியரும் அலுவல் பணிகள் காரணமாக வெளியே சென்றால், மாணவர்களுக்கு கற்பிப்பதற்கும் ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையில் உள்ள 31,336 பள்ளிகளில் 1,08,537 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 25,50,997 மாணவர்கள் படித்து வருகின்றனர் என பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் தொிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், “அரசுப்பள்ளிகளில் தரமான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். குடிநீர், கழிவுநீர் வசதிகளை முறையாக ஏற்படுத்த வேண்டும். அரசுப்பள்ளிகளில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என நியமிக்கப்பட வேண்டும். தரமான கல்வியை அளிப்பதற்கும், நவீன முறையில் கல்வியை அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 18,000 வகுப்பறைகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

Last Updated : Jun 2, 2022, 6:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details