தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்கட்டணம் செலுத்தும் அவகாசத்தை  நீட்டிக்க முடியாது - மின்வாரியம் - கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு

சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்க முடியாது எனத் தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

There is no possibilities to extend time to pay power charges except 4 district, EB report said
There is no possibilities to extend time to pay power charges except 4 district, EB report said

By

Published : Jun 23, 2020, 1:52 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கக்கோரி, வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு அறக்கட்டளையின் நிறுவனரான வழக்குரைஞர் சி. ராஜசேகர் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல்செய்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், "முந்தைய காலத்தில் கஜா புயல் போன்ற தேசிய பேரிடர்களின்போது நுகர்வோர்களின் நிலை அறிந்து மின் கட்டணம் செலுத்துவதற்கான தேதி நீட்டிக்கப்பட்டது.

அதேபோல கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கான தேதி நீட்டிக்கப்பட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

நுகர்வோர்களிடமிருந்து மின் கட்டணம் வசூல்செய்ய தடைவிதித்தால் அது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு பெருத்த நிதி இழப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் ஜூன் 15க்குள் கட்டணம் செலுத்த வேண்டுமென்ற காலக்கெடுவின்படி, 75 விழுக்காடு நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்தக் காரணத்தினால், ஜூலை 31ஆம் தேதிவரை கால நீட்டிப்பு வழங்க முடியாது" என மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இரு தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை வரும் ஜூன் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details