சென்னை:சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தீபாவளிப் பண்டிகையில் எந்த வித மூட நம்பிக்கைகளுக்கோ, சம்பிரதாயங்களுக்கோ இடமில்லை. எல்லா விதமான இருள்களும் அகன்று விவசாயம் பெறுக வேண்டும். தொழில், கல்வி எல்லாமும் பெறுக வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்று தான் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒலி மாசு ஏற்படுத்தாமல், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.
தீபாவளிப் பண்டிகையில் எந்த வித மூட நம்பிக்கைக்கும் இடமில்லை - கிருஷ்ணசாமி - சென்னை செய்திகள்
தீபாவளிப் பண்டிகையில் எந்த வித மூட நம்பிக்கைகளுக்கோ, சம்பிரதாயங்களுக்கோ இடமில்லை எனவும்; அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்று தான் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது எனவும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த தீபாவளியில் இருந்து தூய்மையான மாநிலமாக சென்னை, தமிழ்நாடு வரவேண்டும். தீபாவளிப் பண்டிகையின்போது மது அருந்துவதனை வழக்கமாக சிலர் கொண்டிருக்கிறார்கள். மாசு இல்லாமல் தமிழ்நாடு, தூசி இல்லா தமிழ்நாடு போல மது இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும்.
மாசு இல்லா தமிழ்நாட்டை உருவாக்க அரசு ஒரு பக்கம் தன் கடமையைச் செய்தாலும், எந்தத் திட்டமும் முழுமை பெற வேண்டும் என்றால், மக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும். 8 கோடி பொதுமக்கள் நினைத்தால் தினமும் சுத்தமான காற்றைச் சுவாசிக்க முடியும்.
பட்டாசுகள் இல்லை என்றால் தீபாவளியே இல்லை. பட்டாசும் தீபாவளியும் ஒன்று தான்.முழுவதும் தவிர்க்க முடியாது. ஆனால், குறைந்த அளவு மாசு ஏற்படுத்தக்கூடிய பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தீபாவளி: கடைசி நேர நேரடி பேருந்து முன்பதிவு தொடங்கியது