இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியின் கரோனா வார்டில் சேர்க்கப்பட்ட மூன்று பேர் மரணம் அடைந்த செய்தி அறிந்து மாவட்ட ஆட்சியர், மருத்துவக் கல்லூரி முதல்வருடனும் பேசினேன். அப்போது, மரணமடைந்த மூவரும் வேறு நோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக உடல் நலக்குறைவுடன் இருந்ததாகவும், அதனால் இம்மரணம் நிகழ்ந்ததாக என்னிடம் தெரிவித்தனர்.
அவர்கள் கூறிய மருத்துவக் காரணங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்றாலும், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று கண்டறிவதற்கான லேப் வசதி இல்லை. இது குறித்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை தொடர்பு கொண்டு, கோரிக்கை வைத்தேன். அதற்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.