தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் உரத்தட்டுப்பாடு இல்லை - வேளாண் துறை அமைச்சர் தகவல்! - அறிக்கை வெளியிட்ட அமைச்சர் பன்னீர்செல்வம்

தமிழ்நாடு விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்வதற்காக 90ஆயிரம் டன் யூரியா தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் உரத்தட்டுப்பாடு இல்லை எனவும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat வேளாண் துறை அமைச்சர்
Etv Bharat வேளாண் துறை அமைச்சர்

By

Published : Dec 1, 2022, 6:50 PM IST

சென்னை: தமிழ்நாடு விவசாயிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு தரமான விதைகளையும், ரசாயன உரங்களையும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்கு வேளாண்மை - உழவர் நலத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்வதற்காக 90ஆயிரம் டன் யூரியா தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு தரமான விதைகளையும், ரசாயன உரங்களையும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்கு வேளாண்மை-உழவர் நலத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டிற்கு வரப்பெற்ற உரங்கள் குறித்த விவரத்தை வெளியிட்ட அவர் நடப்பாண்டில் பெய்த சாதகமான பருவமழையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு காலத்தே ரசாயன உரங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனடிப்படையில், தமிழ்நாட்டிற்கு 2022, நவம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து ஆயிரத்து 276 மெட்ரிக் டன் யூரியாவும், 14ஆயிரத்து 263 மெட்ரிக் டன் டிஏபி உரமும், 15ஆயிரத்து 472 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரமும், 68ஆயிரத்து 248 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 99ஆயிரத்து 259 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் வரப்பெற்றுள்ளன.

தேவைக்கேற்ப யூரியா இருப்பு வைக்க தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரம்:-

தமிழ்நாட்டில் நடப்பு சம்பா மற்றும் ரபி பருவத்தில் இதுவரை 36.725 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல், மக்காச்சோளம், சிறுதானியங்கள், பயறு வகைப் பயிர்கள், எண்ணெய்வித்துக்கள், பருத்தி போன்ற வேளாண் பயிர்களும், 6.4 லட்சம் ஏக்கரில் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்சமயம், அனைத்து வகைப்பயிர்களும் நன்கு வளர்ந்து, மேலுரமிடும் பருவத்தில் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வேளாண் மக்களுக்கு தேவைப்படும் அளவிற்கு யூரியா உள்ளிட்ட ரசாயன உரங்களை உரிய நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் வழங்குவதற்கு ஒன்றிய அரசு மற்றும் கிரிப்கோ மற்றும் கொரமண்டல் போன்ற உர நிறுவனங்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 90ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டு, காவேரி டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு போர்க்கால அடிப்படையில் ரயில் மற்றும் லாரிகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'Mission Chennai' வாகனத்தை தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!

ABOUT THE AUTHOR

...view details