தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வந்தது மகளிர் உரிமைத் தொகை ரூ.1000.. தேனி பெண்கள் குஷி; அதிகாரிகள் குழப்பம்!

Kalaignar Magalir Urimai Thogai: தேனி மாவட்டத்தில் பல பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை நாளை(செப்.15) முதலமைச்சர் துவக்கி வைக்கவுள்ள நிலையில் முன்னதாகவே வரவு வைக்கப்பட்டுள்ளது குறித்து அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Kalaignar Magalir Urimai Thogai
Kalaignar Magalir Urimai Thogai

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 2:02 PM IST

Updated : Sep 14, 2023, 3:21 PM IST

தேனி:2021 சட்டமன்ற தேர்தலின் போதுதிமுக தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு ஆட்சியமைத்த பிறகு இந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.

அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் நிதிநிலையைச் சரி செய்த பிறகு கண்டிப்பாகத் திட்டம் நிறைவேற்றப்படும் எனக் கூறினார். அதனைச் செயல்படுத்தும் வகையில் கடந்த பட்ஜெட் தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர், இந்த திட்டத்தைச் செயல்படுத்த 7,000 கோடி பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அரசு சார்பில், மகளிர் உரிமைத் தொகைக்குப் பயனாளிகள் தேர்வில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டது. இதில், பல்வேறு விமர்சனங்களை எழுப்பிய போதிலும், அரசுத் திட்டத்தை நிறைவேற்றத் தொடர்ந்து பணிகளை தீவிரப்படுத்தியது. விண்ணப்பங்கள் பதிவேற்றம், அதன் மீதான ஆய்வு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமத்தொகை திட்டத்தை நாளை செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் இந்த திட்டத்தின் பயனைப் பெற ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் பெரும்பாலானோர் வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாயானது இன்றே வரவு வைக்கப்பட்டுள்ளது. திட்டம் நாளை தான் துவங்க உள்ள நிலையில் முன்னதாகவே பணம் எப்படி வந்தது என்ன பயனாளிகள் மற்றும் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:Seeman: திமுக என்னை மிரட்ட பார்க்கிறது: சீமான் பகீர் புகார்

Last Updated : Sep 14, 2023, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details