தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சகோதரி வீட்டில் திருட்டு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் சகோதரி மகாலட்சுமி வீட்டில் 15 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் திருடு போயுள்ளதாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

File pic

By

Published : Jun 13, 2019, 2:26 PM IST

சென்னை அபிராமபுரத்தில் வசித்துவரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் சகோதரி மகாலட்சுமி, தனது வீட்டில் 15 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், பணம் திருடுபோய் உள்ளதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரில் மகாலட்சுமி தனது வீட்டில் ஐந்து நபர்கள் வேலை செய்துவருவதாகவும் அதில் வீட்டு பணிப்பெண் சுதா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சுதா வீட்டில் உள்ள பொருட்கள், நகைகள் போன்றவற்றை கடந்த மூன்று வருடங்களாக சிறுக சிறுக திருடி அடகு வைத்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சகோதரி வீட்டில் திருட்டு

இது குறித்து காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details