தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 ஆண்டுகளாக நகை கடையில் திருடிய ஊழியர்கள் கைது! - நகை கொள்ளை

சென்னை: தியாகராய நகரில் உள்ள பிரபல நகை கடை ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளாக நூதன முறையில் திருடிய ஊழியர்களை மாம்பலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தி நகரில் 10 ஆண்டுகளாக நகை கடையில் திருடிய ஊழியர்கள் கைது

By

Published : Apr 4, 2019, 7:13 PM IST

சென்னை தியாகராயர் நகரை அடுத்த பனகல் பார்க் அருகே இயங்கி வரும் பிரபல நகை ஒன்றில் லியோ ஜான், அம்ஜித் ஆகியோர் பழைய நகைகளை வாங்கி புதிய நகைகளாக மாற்றும் பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இவ்விரு ஊழியர்களும் கடந்த 10 ஆண்டுகளில் சிறுக, சிறுக நகைகளைத் திருடி விற்றதை கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கடையின் உரிமையாளர் ஜோசப், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், இருவரையும் பிடித்து விசாரித்ததில் விற்பனைக்கு வரும் பழைய நகைகளை உருக்கி புதிதாக மாற்றும் போது சிறுக, சிறுக நகைகளைத் திருடியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, 250 சவரன் நகைகளைத் திருடி வியாபாரியிடம் விற்றுள்ளனர். இதையடுத்து, லியோ ஜான், அம்ஜித் ஆகிய இருவரையும் கைது செய்த மாம்பலம் போலீசார், 150 சவரன் நகைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details