சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. அதை விரிவுபடுத்த பல மாதங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. கணக்குப்படி வட சென்னையில் 63 வார்டுகளைக் கொண்ட 5 மண்டலங்களும், மத்திய சென்னையில் 79 வார்டு கொண்ட 5 மண்டலங்களும், தென் சென்னையில் 58 வார்டுகளைக் கொண்ட 5 மண்டலங்கள் செயல்பட்டு வருகிறது. அதற்காக 3 வட்டார துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் தொகை பெருக்கம், வேலை செய்வதற்கு பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வருவோர், தொழில்துறை வளர்ச்சி உள்ளிட்டவையை கருத்தில்கொண்டு 15 மண்டலங்களை 23ஆக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அரசு அனுமதி வழங்கியவுடன் அறிவிப்பு வெளியாகும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னையின் 15 மண்டலங்களை 23 மண்டலங்களாக மாற்றும் பணி தீவிரம் - மாநகராட்சி அதிகாரிகள்
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களை 23 மண்டலங்களாக மாற்றும் முதல்கட்ட பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களை 23 மண்டலங்களாக ஆக மாற்றும் பணி தீவிரம்