தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழுவேலி ஈரநிலம் இனி பறவைகள் சரணாலயம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - விழுப்புரத்தில் 16ஆவது பறவைகள் சரணாலயம்

விழுப்புரம் மாவட்டம், கழுவேலி ஈரநிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதனால் தமிழ்நாட்டின் 16ஆவது பறவைகள் சரணாலயம் ஆகிறது, கழுவேலி ஈரநிலம்.

கழுவேலி ஈரநிலம் இனி பறவைகள் சரணாலையம் - தமிழக அரசு அறிவிப்பு
கழுவேலி ஈரநிலம் இனி பறவைகள் சரணாலையம் - தமிழக அரசு அறிவிப்பு

By

Published : Dec 7, 2021, 8:37 PM IST

சென்னை:விழுப்புரம் மாவட்டம், கழுவேலி ஈரநிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதனால் தமிழ்நாட்டின் 16ஆவது பறவைகள் சரணாலயம் ஆகிறது, கழுவேலி ஈரநிலம்.

முன்னதாக, பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட வேண்டிய பகுதிகளின் வரையறைகள் மற்றும் வரம்புகளை அரசு வெளியிட்டுள்ளது.

5000-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் சரணாலயம்:

அதன்படி, மொத்தம் 5151.60 ஹெக்டோ் நிலப்பரப்பில் சரணாலயம் அமையவுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூா் மற்றும் மரக்காணம் தாலுகா பகுதிகளில் அமைந்துள்ளது, கழுவேலி உவா்நீா் ஈர நிலம்.

இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆண்டுதோறும் அரிய பறவைகள் வருவது வழக்கம்.

சுற்றுச்சூழல் அமைப்பை உணர்ந்ததால் சரணாலயமாக்க முடிவு:

அதன் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உயிரியல் முக்கியத்துவத்தை உணா்ந்து அவ்விடத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலா் சுப்ரியா சாஹூ அரசாணை வெளியிட்டுள்ளார்.

பரிந்துரைகளை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டது அரசு:

கழுவேலி ஈரநிலத்தைப் பறவைகள் சரணாலயமாக மாற்றியமைக்க வேண்டி மாநில முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளா் ஆகியோரிடமிருந்து அரசுக்குப் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டன.

அவற்றை கவனமாக ஆராய்ந்து, கழுவேலி ஈரநிலத்தைப் பறவைகள் சரணாலயமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தாலூகாவில் 3027.25 ஹெக்டோ் நிலப்பரப்பையும், வானூா் தாலூகாவில் 2124.35 ஹெக்டோ் நிலப்பரப்பையும் ஒருங்கிணைத்து கழுவேலி பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சரவணா ஸ்டோர் குழும சோதனை; ரூ.1,230 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details