தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிபோதையில் வீட்டின் மாடி அருகே சென்ற மின்சாரக்கம்பியைப் பிடித்தவர் பலி - எஸ்ஆர்எம் கல்லூரி

சென்னையில் குடிபோதையில் வீட்டின் மாடி அருகே சென்ற மின்சாரக் கம்பியை பிடித்தவர் மின்சாரம் தாக்கி பலியானார்.

மின்சார கம்பியை பிடித்தவர் பலி
மின்சார கம்பியை பிடித்தவர் பலி

By

Published : Oct 30, 2022, 10:04 PM IST

Updated : Oct 30, 2022, 10:59 PM IST

சென்னை: ராமாபுரம் பூதபேடு கலப்பன் நாயக்கர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர், தினேஷ்(30). இவர் எஸ்ஆர்எம் கல்லூரியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தினேஷ், வீட்டின் மொட்டை மாடி பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த மின்சாரக் கம்பியை கையால் பிடித்துள்ளார்.

அப்போது மின்சாரம் தாக்கி, கம்பியைப் பிடித்த தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், ராமாபுரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவத்திற்குச் சென்ற போலீசார் மின் இணைப்பைத் துண்டித்து உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சாரக் கம்பியை பிடித்தவர் பலி

இதையும் படிங்க:சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவு

Last Updated : Oct 30, 2022, 10:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details