தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்தாண்டு வரை மாஞ்சா நூல் பயன்படுத்தத் தடை நீட்டிப்பு - மாஞ்சா நூலுக்கு தடை

சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்துவதற்கு மேலும் 60 நாள்கள் தடை நீட்டித்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாஞ்சா நூல்
மாஞ்சா நூல்

By

Published : Nov 15, 2021, 9:50 AM IST

சென்னையில் மாஞ்சா நூலால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன. இதனால் சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் தயாரிக்க, பறக்கவிட, விற்பனை செய்ய, சேமித்துவைக்க தடைவிதித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் மாஞ்சா நூல் மீதான தடையை மேலும் 60 நாள்களுக்கு நீட்டித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி அடுத்தாண்டு ஜனவரி 9ஆம் தேதி வரை மாஞ்சா நூல் விடத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி மாஞ்சா நூல் பயன்படுத்தினால் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கழுத்தை அறுத்த மாஞ்சா நூலால் இளைஞர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details