தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிலின் மேல் தள சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு - Chennai District News

சென்னை: கோயிலின் மேல்தள சுவர் இடிந்து விழுந்து சுங்கத்துறை ஒப்பந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சுங்கத்துறை ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு
சுங்கத்துறை ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு

By

Published : Jun 5, 2021, 6:24 PM IST

சென்னை: வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் திவாகர் (58). சென்னை மண்ணடியில் இயங்கி வரும் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிப்புரிந்து வந்த இவர், பணிக்கு செல்வதற்கு முன்பு தம்பு செட்டி தெருவில் உள்ள இரட்டை விநாயகர் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம்.

அதுபோல இன்று (ஜூன்5) காலை இரட்டை விநாயகர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோயிலின் மேல்தள சுவர் திடீரென இடிந்து திவாகரனின் தலையில் விழுந்ததால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த எஸ்பிளனேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, திவாகரின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புதுக்கோட்டை: சாலை விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகள்!

ABOUT THE AUTHOR

...view details