இதுகுறித்து ஈடிவி பாரத் செய்திகளுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “இந்தியாவில் அணுக்கழிவுகளை நிரந்திரமாக வைக்கக்கூடிய ஆழ்நில அணுக்கழிவு மையம் (Deep Geological Repository DGR) முடிவு செய்யாமல் தற்காலிக ( Away From Reactor AFR) அணுக்கழிவுகள் சேமிக்கும் திட்டம் நிச்சயமாக ஆபத்தான போக்கு ஆகும்.
இந்நிலையில் ஆழ்நில அணுக்கழிவு மையம் ஒரு வேளை அமையாமல் போனால் கூடங்குளத்தில் அமையவிருக்கும் தற்காலிக அணுக்கழிவு மையமே நிரந்தரமாகிவிடும். கடற்கரை பகுதி, சுனாமி தாக்கிய பகுதியில் ஆழ்நில கருவூலம் அமைக்காமல் அணுக்கழிவுகளை சேமிப்பது மிகுந்த ஆபத்தானதாகும்.
எனவே இந்த தற்காலிக அணுக்கழிவு மையம் என்பது அமைக்கக்கூடாது என்று அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல் இதுகுறித்து முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதி கோரியுள்ளோம். மேலும் அணுக்கழிவு தற்காலிக மையத்திற்கு தொடர்பாக எங்கள் தரப்பில் இருந்து சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஒருகிணைப்பாளர் சுந்தர்ராஜன் சிறப்பு பேட்டி அணுஉலைகளை எவ்வளவு தான் பாதுகாப்பாக வைத்தாலும், அது ஆபத்துக்குரியதுதான். எனவே தான் அணுசக்தி, அணுமின் நிலையங்களை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். உலகில் நில அதிர்வுகள் ஏற்படாத இடம் என்று எதுவும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதற்கு ஜப்பான் போன்ற நாடுகள் சிறந்த உதாரணாம். டிஜிஆர் அமைப்பதன் மூலம் நில அதிர்வுகள் தவிர்க்கப்படும் என்றாலும், இது செயல்படுவது மனிதசக்திக்கு அப்பாற்பட்ட செயல் ஆகும்” என்றார்.