சென்னை,கோயம்பேடு மார்கெட்டில் சில நாட்களுக்கு முன்பு 100 ரூபாய் வரை விலை அதிகமாக விற்ற தக்களி நேற்று முதல் விலை குறைந்து தற்போது 60 ரூபாய்க்கு விற்பணையாகி வருகிறது.
குறைந்தது தக்காளி விலை!
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ள நிலையில், தக்காளி விலை குறைந்துள்ளது.
கோயம்பேடு மார்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. வெளிமாநிலங்களில் மழை பெய்ததால் காய்கறிகளின் வரத்து குறைந்ததாக கூறப்பட்டது. இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டது. குறிப்பாக தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது கோயம்பேடு மார்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது.
வ.எண் | பொருள் | விலை (மே 26) |
1 | அவரைக்காய் | ரூ.50 |
2 | நெல்லிக்காய் | ரூ.50 |
3 | மக்காச்சோளம் | ரூ.85 |
4 | பீன்ஸ் | ரூ.90 |
5 | பீட்ரூட் | ரூ.40 |
6 | பாவற்காய் | ரூ.35 |
7 | கத்திரிக்காய் | ரூ.40 |
8 | முட்டைகோஸ் | ரூ.20 |
9 | குடைமிளகாய் | ரூ.50 |
10 | கேரட் | ரூ.30 |
11 | காலிபிளவர் | ரூ.25 |
12 | கொத்தவரை | ரூ.169 |
13 | சின்ன தேங்காய் | ரூ.25 |
14 | பெரிய தேங்காய் | ரூ.28 |
15 | வெள்ளரி | ரூ.20 |
16 | முருங்கைக்காய் | ரூ.60 |
17 | பெரிய பூண்டு | ரூ.160 |
18 | சின்ன பூண்டு | ரூ.150 |
19 | இஞ்சி | ரூ.45 |
20 | பச்சை பட்டாணி | ரூ.90 |
21 | பச்சை மிளகாய் | ரூ.20 |
22 | கருணைக்கிழங்கு | ரூ.45 |
23 | கோவக்காய் | ரூ.25 |
24 | வெண்டைக்காய் | ரூ.40 |
25 | மாங்காய் | ரூ.25 |
26 | மரவள்ளி | ரூ.67 |
27 | நூக்கல் | ரூ.35 |
28 | பெரிய வெங்காயம் | ரூ.15 |
29 | சாம்பார் வெங்காயம் | ரூ.25 |
30 | பீர்கங்காய் | ரூ.89 |
31 | உருளைக்கிழங்கு | ரூ.30 |
32 | முள்ளங்கி | ரூ.13 |
33 | சேனைகிழங்கு | ரூ.20 |
34 | சேப்பங்கிழங்கு | ரூ.48 |
35 | புடலங்காய் | ரூ.25 |
36 | சுரைக்காய் | ரூ.20 |
37 | பெங்களூர் தக்காளி | ரூ.60 |
38 | லோக்கல் தக்காளி | ரூ.60 |
39 | வாழைப்பூ | ரூ.30 |
40 | வாழை தண்டு | ரூ.06.50 |
41 | பூசணி | ரூ.26 |
இதையும் படிங்க:"லாபம் கொட்டிக் கொடுக்கும் கழுதைப்பால்”....சாதித்தது எப்படி?