சென்னை: ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவைச் சேர்ந்தவர் பச்சையப்பன். தற்போது கனடாவில் வசித்து வருகிறார். இவரது மனைவி வித்யா. இவர், அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மகள், மகன் உள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டில் பச்சையப்பனுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
மேட்ரிமோனியில் இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடல்:இது தொடர்பாக குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிறகு பச்சையப்பன் தனது மனைவியுடன் சமாதானம் ஆகி வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மனைவியைப் பிரிந்த சமயத்தில் பச்சையப்பன் 2-வது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, கடந்த 2020ஆம் ஆண்டு மறுமணம் செய்யவேண்டி ஆன்லைன் மூலமாக விவாகரத்து மற்றும் விதவைப் பெண் வேண்டும் என திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார்.
பெண் குரலில் பேசி ரூ.1.35 கோடியை சுருட்டிய மேட்ரிமோனி மோசடி ஆசாமி..! இதனையறிந்து கொண்ட பெரம்பூரைச் சேர்ந்த செந்தில் பிரகாஷ் என்பவர் போன் மூலம் பச்சையப்பனைத் தொடர்பு கொண்டு பேசினார். தனது தங்கை ராஜேஸ்வரி விதவையாக இருப்பதாகவும், அவருக்கு தங்களை மிகவும் பிடித்திருப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார். பிறகு அவரது தங்கை பச்சையப்பனிடம் போன் மூலம் பேசியுள்ளார். போனிலேயே பேசிப் பழகியும் உள்ளனர்.
இதையடுத்து பச்சையப்பனிடம் ராஜேஸ்வரி தொழில் தொடங்க வேண்டும் என்று கூறி ஆன்லைன் மூலமாக ரூ.1.35 கோடி வாங்கியுள்ளார். கரோனா காலம் என்பதால் பச்சையப்பனை நேரில் சந்திக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் 2-ம் தேதி செந்தில் பிரகாஷின் தங்கையைச் சந்திக்க கனடாவில் இருந்து சென்னை வந்தார், பச்சையப்பன்.
திட்டமிட்டு மோசடி:மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கிய பச்சையப்பன், ராஜேஸ்வரியை நேரில் வரும்படி அழைத்துள்ளார். அவருக்காக கனடாவில் இருந்து பரிசு பொருட்கள் வாங்கி வந்திருந்தார். ஆனால் ராஜேஸ்வரி ஓட்டலுக்கு வரவில்லை. அவரது சகோதரர் செந்தில் பிரகாஷ் மட்டுமே வந்து, ரூ.3,60,903 மதிப்புள்ள பொருட்களை வாங்கிச் சென்றுள்ளார்.
பெண் குரலில் பேசி ரூ.1.35 கோடியை சுருட்டிய மேட்ரிமோனி மோசடி ஆசாமி..! இதனால் சந்தேகமடைந்த பச்சையப்பன், கடந்த 23-ம் தேதி மீண்டும் சென்னை வந்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 406- நம்பிக்கை மோசடி, 420- பண மோசடி, 506(2)- கொலை மிரட்டல் ஆகியவற்றின் கீழ் ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பெரம்பூரில் இருந்த செந்தில் பிரகாஷை ராயப்பேட்டை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
செந்தில் பிரகாஷ் டிரேடிங் தொழில் செய்து வந்ததும், கரோனா ஏற்பட்டதால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், மோசடியில் ஈடுபட செந்தில் பிரகாஷ் திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறை விசாரணை: மேட்ரிமோனியில் பச்சையப்பனின் செல்போன் எண்ணை எடுத்து தங்கை இருப்பது போல நாடகமாடியதாகவும், செந்தில் பிரகாஷ் தங்கை போல சாஃப்ட்வேர் மூலம் பெண் குரலில் பேசி பண மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் நிறுவனம் தொடங்குவதாகக் கூறி பச்சையப்பனிடம் ஆசைவார்த்தை கூறி ரூ.4 லட்சம் பறித்துள்ளார். கேட்டவுடன் பச்சையப்பன் பணத்தை அளித்ததால் மேலும் பணத்தைப் பெற விரும்பிய செந்தில், சிறுக சிறுக ரூ.1.38 கோடி வரை பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மேலும் விவகாரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், ஜீவானம்சம் அவரது மனைவி கேட்டபோது பச்சையப்பன் பணமில்லை என நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி பச்சையப்பனின் வங்கிக் கணக்கை விசாரித்த போது, செந்தில் வங்கி கணக்கிற்கு மொத்தப் பணமும் சென்றது தெரியவந்தது. அதன் பின்னர் மனைவியுடன் சமரசமாகி ஒன்றாக வாழ சம்மதித்த நிலையில், நடந்தவற்றை மனைவியிடம் தெரிவித்து அவர் அறிவுறுத்தலின் அடிப்படையில் சென்னைக்கு வந்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் செந்தில் மீது புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட செந்திலிடம் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: புஷ்பா ஸ்டைலில் கணவனின் கழுத்தை அறுத்த மனைவி- தெலுங்கனாவில் அதிர்ச்சி சம்பவம்