தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவொற்றியூர் தொகுதி திமுக உறுப்பினர் கே.பி.பி சாமி, திருவொற்றியூர் தொகுதியில் நாள்தோறும் சுமார் 4முதல் 10நேரம் வரை மின்தடை ஏற்படுவதாகவும், இதற்கு அரசு என்ன தீர்வு வழங்கவுள்ளது என கேள்வி எழுப்பினர்.
பள்ளம் தோண்டுவதால் மின்தடை - அமைச்சர் தங்கமணி விளக்கம் - tamilnadu
சென்னை: வெவ்வேறு துறை சார்பில் பல்வேறு பணிகளுக்காக நிலத்தில் குழிதோண்டும் போது, மின் கேபிள்கள் பழுதாவதால் மின் தடை ஏற்படுவதாக, சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்து பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, உயர்மின்னழுத்த கோபுரத்தில் உள்ள இன்சுலேட்டர் வெடித்ததாலும், அதை கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் ஆனதால் தான், மின்தடை இருந்ததாகவும், தற்போது பிரச்னை சரிசெய்யப்பட்டுள்ளதால், மின்வினியோகம் சீராகியுள்ளது என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு துறைகள் சார்பில் பள்ளம் தோண்டப்படுவதால், மின்கேபிள்கள் பழுதாகி மின்தடை ஏற்படுகிறது, மற்றப்படி தமிழ்நாட்டில் மின்வெட்டு என்பதே இல்லை என்றார்.