சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் ஐந்தாவது நடைமேடையில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய எழுத்துகள் அடங்கிய இரண்டு பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று காலை பெயர் பலகைகளில் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்ததை மட்டும் கறுப்பு ஸ்பிரே மூலமாக சிலர் அழித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உடனே, இது தொடர்பாக ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் ரயில்வே நிர்வாகம் அழிக்கப்பட்ட எழுத்துகளை மீண்டும் சீர் செய்தனர். இது குறித்து ரயில்வே நிர்வாகம் அளித்தப்புகாரின் பேரில் கடற்கரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பொது சொத்துகளை சேதப்படுத்துதல் என்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்பிரே அடித்த மர்ம நபர்களை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.