சென்னை : இணையம் வழியாக நடைபெறும் எர்த்திங் மாஸ்டர்ஸ் எனும் ரேபிட் முறையிலான செஸ் தொடரின் 8ஆவது சுற்றில் பிரக்ஞானந்தாவும், கார்சல்னும் பிப். 21ஆம் தேதி மோதினார்கள்.
ரேபிட் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆடப்படும் போட்டியாகும். இந்த போட்டியில் உலகின் நம்பர் ஒன் செஸ் கிராண்ட் மாஸ்டர் கார்சலனை இந்திய நம்பர் ஒன் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தோற்கடித்தார். அதனை கௌரவிக்கும் வகையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல ரேலா மருத்துவமனை சார்பில் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக குழு இயக்குநர் பேராசிரியர் முகமது ரேலா, பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.