தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்பகை காரணமாக வீடு புகுந்து தாக்குதல் - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு - சிவலிங்கத்துபுரம்

சென்னை கே.கே. நகரில் முன்பகை காரணமாக வீடு புகுந்து ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முன்பகை காரணமாக வீடு புகுந்து தாக்குதல்; போலீஸ் வலைவீச்சு
முன்பகை காரணமாக வீடு புகுந்து தாக்குதல்; போலீஸ் வலைவீச்சு

By

Published : Dec 18, 2022, 10:49 PM IST

Updated : Dec 18, 2022, 11:00 PM IST

சென்னை:சிவலிங்கத்துபுரம் பகுதியில் வசித்து வரும் இளைஞர்களுக்கும், அதன் அருகே புதூர் பகுதியில் வசித்து வரும் இளைஞர்களுக்கும் முன்பகை காரணமாக தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு (டிச.17) சிவலிங்கத்துபுரம் பகுதியைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவர் வீட்டில், புதூர் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கத்தி, பீர் பாடில் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் சிவலிங்கத்துபுரம் பகுதியைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கே.கே. நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பள்ளி மாணவர்கள் இடையே நடக்கும் மோதல்களால் இதுபோல் இரு பகுதிகளுக்கும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:Viral Video: மணல் கொள்ளையை தடுக்க சுவரொட்டி: இளைஞருக்கு அடி உதை

Last Updated : Dec 18, 2022, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details