தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மார்க்’ நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு! - MHC

வேலூரைச் சேர்ந்த மார்க் என்கிற பங்கு சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிரான நிதி மோசடி புகாரில், வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தமிழக டிஜிபி க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘மார்க்’ நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
‘மார்க்’ நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Aug 5, 2022, 11:32 AM IST

சென்னை : கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “எனது நண்பர்கள் மூலம் மோகன்பாபு விஜயன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. மோகன்பாபுவும், ஜனார்த்தனன் சுந்தரம், வேதநாராயணன் சுந்தரம் மற்றும் லக்‌ஷ்மி நாராயணன் சுந்தரம் ஆகியோர் பங்குச்சந்தை முதலீட்டு தொழில் செய்யும் "மார்க்" (MARC) என்ற நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 26 சதவீதத்திற்கு மேலும், மாதத்திற்கு 2 சதவீதமும் பணம் லாபம் கிடைக்கும் என உறுதியளித்தனர். இதனை நம்பி நானும் இரண்டரை லட்சம் முதலீடு செய்தேன். முன்னதாக உறுதி அளிக்கப்பட்டதுபோல், மே மாதம் வரை பணம் திருப்பி கிடைத்த நிலையில், ஜூன் மாதம் முதல் பணம் வரவில்லை.

இதுதொடர்பாக கேட்டபோது, அலுவலகத்தில் தணிக்கை நடைமுறை சார்ந்த சில பிரச்னைகள் ஏற்பட்டதால், தாமதமாகிறது என கூறப்பட்டது. மீண்டும் பணம் திருப்பி கொடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர்கள் தலைமறைவாகிவிட்டது தெரிய வந்தது.

இதுதொடர்பாக டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், “மார்க் நிறுவனத்திற்கு எதிராக கார்த்திக் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:'கீழ்த்தரமான செயல்' - ஓபிஎஸ்ஸை கண்டித்த நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details