தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பதிவு செய்வதால் மட்டும் புனிதமாகிவிடாது - விருப்பமில்லா திருமணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கருத்து - மணப்பெண்

தனது திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிடக்கோரி மணப்பெண் தாக்கல் செய்த மனுவிற்கு, விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வதால் மட்டும் அதன் புனிதமானதாக மாறி விடாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வதால் அது புனிதமாகாது - சென்னை உயர்நீதிமன்றம்
விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வதால் அது புனிதமாகாது - சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Dec 17, 2022, 4:37 PM IST

சென்னை: கோவையில் உள்ள தேவாலயத்தில், கடந்த அக்டோபர் மாதம், தனது விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்யக் கூடாது என பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிடக் கோரி மணப்பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், திருமணம் என்பது நடந்து, அதை பதிவு செய்யாவிட்டாலும், அது செல்லத்தக்கது தான் எனவும், அந்த திருமணத்தை நீதிமன்ற உத்தரவு மூலமாகத் தான் ரத்து செய்ய முடியும் என்பதால், மனுதாரர் கோரியபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வதால் மட்டும், அதற்கு புனிதம் கூடி விடாது எனத் தெரிவித்த நீதிபதி, திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி உரிமையியல் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஏழைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்காமல் செய்வது தான் விடியல் அரசா? - இபிஎஸ் விளாசல்!

ABOUT THE AUTHOR

...view details