தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக நம்பர் 1': 2020-21 நிதியாண்டில் அதிக செலவு செய்த மாநில கட்சி! - electoral bonds

2020-21 நிதியாண்டில் அதிக செலவினம் செய்த மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம் பிடித்து இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) ஆய்வு நடத்தி தகவல் வெளியிட்டுள்ளது.

திமுக
திமுக

By

Published : May 27, 2022, 8:27 PM IST

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் 2020-21 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மாநிலக் கட்சிகள் பெற்ற நிதி தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2020-21 நிதியாண்டில் 31 மாநிலக் கட்சிகள் சுமார் 529 கோடி ரூபாய் நிதி பெற்று, அதே ஆண்டில் சுமார் 414 கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்துள்ளன.

இதில் அதிக செலவு செய்த மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் திமுக சுமார் 218 கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி சுமார் 54 கோடி ரூபாயும், அதிமுக 42 கோடி ரூபாயும், ஜனதா தள கட்சி 24 கோடியே 35 லட்சம் ரூபாயும் , தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 22 கோடியே 35 லட்சம் ரூபாயும் செலவு செய்துள்ளன.

தன்னார்வ பங்களிப்புகளின் மூலம் மாநிலக் கட்சிகள் 250 கோடி ரூபாய் அளவிற்கு தேர்தல் பத்திரங்கள் மூலமும் , இதர நன்கொடைகள் மூலம் சுமார் 126 கோடியே 26 லட்சம் ரூபாய் நிதி பெற்றுள்ளன. குறிப்பாக 5 மாநிலக்கட்சிகள், 2020-21 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் 250 கோடியே 60 லட்சம் ரூபாய் தன்னார்வ பங்களிப்புகள் மூலம் நிதி பெற்றுள்ளன. 5 மாநிலக் கட்சிகள் மொத்தமாக 434 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி பெற்றுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட 31 மாநிலக் கட்சிகளில் 29 மாநிலக் கட்சிகளின் நிதி வரவு 2019-20ஆம் நிதியாண்டில் சுமார் 520 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2020-21ஆம் நிதியாண்டில் அது 34.96 விழுக்காடு சரிந்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:2024 மக்களவைத் தேர்தல் - சமூக ஊடகப்பரப்புரைகளில் அதிக கவனம் செலுத்த பாஜக திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details