தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ரூ.1 கோடி மதிப்பீட்டில் சாரணியர் தலைமையகம் புதுப்பிக்கப்படும்" - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தகவல்!

Chennai Scout Headquarters Renovation: சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமையகம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி கூறினார்.

“ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாரணியர் தலமையகம் புதுப்பிக்கப்படும்” - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தகவல்
“ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாரணியர் தலமையகம் புதுப்பிக்கப்படும்” - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தகவல்

By

Published : Aug 15, 2023, 10:49 PM IST

Updated : Aug 15, 2023, 11:09 PM IST

“ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாரணியர் தலமையகம் புதுப்பிக்கப்படும்” - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தகவல்

சென்னை:இந்தியாவின் 77 வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை திருவல்லிக்கேணி, காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரணர் சாரணியர் (SCOUT) இயக்கத்தின் மாநில தலைமையகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளிக் கல்வி துறை இயக்குனரும், பாரத சாரண சாரணியர் இயக்க மாநில தலைமை ஆணையருமான அறிவொளி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சாரண சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை பள்ளிக் கல்வி துறை இயக்குனரும், பாரத சாரண சாரணியர் இயக்க மாநில தலைமை ஆணையருமான அறிவொளி, மாநிலத்துணைத் தலைவரும் தொடக்கக்கல்வித்துறை இயக்குனருமான கண்ணப்பன் ஏற்றுக் கொண்டனர்.

பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவொளி, "பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உடல் நலம் சரியாக இருந்தாலும், மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் என்னை இந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்த சொன்னார்”.

மேலும் அமைச்சர் அறிவிக்க இருந்த இரண்டு அறிவிப்புகளையும் வெளியிட்டார். “இப்போது 4 லட்சமாக இருக்கும் சாரண சாரணியர் எண்ணிக்கையை இந்த ஆண்டே 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது அமைச்சர் அன்பில் மகேஷின் கனவு அதற்கு சாரண சாரணியர்கள் இணைந்து செயல்பட வேண்டும்” என்றுக் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க:‘அடுத்த ஆண்டு சுதந்திர தினத்திலும் உரையாற்றுவேன்’ - நாடாளுமன்றத் தேர்தலுக்கு தொடக்கப்புள்ளி வைத்து பிரதமர் உரை!

தொடர்ந்து பல நாள் கோரிக்கையான சாரண சாரணியர் தலைமை வளாகம் 1 கோடி ரூபாய் அளவில் புதுப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் பெயரளவில் இருந்த இயக்கங்கள் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த இயக்கத்தில் உள்ள மாணவர்கள் இந்த சமூகத்தின் சிற்பிகளாக மாற வேண்டும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் 77 ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை என் மூலமாக தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி என்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் மூத்த சாரணர் முத்துக் கிருஷ்ணன் தமிழில் மொழிப் பெயர்த்த சாரண ஆசிரியத்துவ கையேடு புத்தகம் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் சாரண சாரணியர் (Scout) இயக்கத்தில் 4 லட்சமாக இருக்கும் எண்ணிக்கையை இந்த ஆண்டே 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழியின் கனவு என்றும், சாரண சாரணியர் இயக்கத் தலைமையகம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட உள்ளது எனவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிக்க சொன்னதாக சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தெரிவித்தது மாணவர்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க:‘மாநிலப் பட்டியலில் கல்வி’ - சுதந்திர தின விழாவில் நீட் தேர்வுக்காக முழங்கிய ஸ்டாலின்!

Last Updated : Aug 15, 2023, 11:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details