தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைக்காலங்களில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது - கே.எஸ் அழகிரி புகழராம் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி

மழைக்காலங்களில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ் அழகிரி புகழராம்
கே.எஸ் அழகிரி புகழராம்

By

Published : Nov 10, 2021, 9:39 AM IST

சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று (நவ.10) தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி நிவாரண பொருட்களை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே எஸ் அழகிரி, ” டெல்டா பகுதியில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஒன்றிய அரசு அதன் குழுவை அனுப்பி உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் வென்றுள்ள மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது

எனவே மக்கள் காங்கிரஸை அதிகமாக வெற்றி பெற வைக்க வேண்டும். மழைக்காலங்களில் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுகிறது “ எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், ”தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெள்ளப்பெருக்கின் போது இது போன்ற காரியங்கள் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ்நாடு அரசும் வெள்ளப் பெருக்கின் போது சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” என்றார்.

இதையும் படிங்க : சட்டப்பேரவை உறுப்பினருக்கு சுட்டிக்காட்ட 'படகுசவாரி' தொடங்கிய இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details