தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள அரசு தயார்! - The government is preparing to face the third wave of corona

கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-third-wave-of-corona
-third-wave-of-corona

By

Published : Sep 2, 2021, 3:47 PM IST

சென்னை :தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இன்று (செப்.2) மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அரசு கொள்கை விளக்க குறிப்பு வெளியிட்டது.

அதில், நாடுமுழுவதும் உள்ள பல திறமையான பொது சுகாதார வல்லுநர்கள் அடங்கிய குழுவின் கூட்டம் ஜூன் 6ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. சிறப்பு பொது சுகாதார நிபுணர்கள் கொண்ட ஒரு சிறப்பு வழிகாட்டிக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொரு வாரமும் கூடி மாநிலத்தில் கரோனா தொற்றின் தற்போதுள்ள நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
கரோனா மூன்றாவது அலையில் தொற்று ஏற்படும் குழந்தைகளின் சிகிச்சைக்காக ஒரு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில கரோனா கட்டளை மையம், பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள மூன்றாவது அலை தாக்கம் பற்றி விரிவாக ஆராய்ந்து இந்த தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளது.
இதனடிப்படையில் ஆக்ஸிஜன், தீவிர சிகிச்சைப் பிரிவு, வெண்டிலேட்டர்கள், சுவாசக் கருவிகள், திரவ மருத்துவ ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் சிலிண்டர் இருப்பு, சிலிண்டர் நிரப்புதற்கான ஏற்பாடுகள், ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள், கரோனா மருந்து தேவைகள் கணக்கிடப்பட்டு மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயாராக வைக்கப்பட்டுள்ளன என மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புக - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details