தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற கலைக்கல்லூரிகளை எல்லாம் அரசே எடுத்துக்கொள்ள முடிவு - அமைச்சர் பொன்முடி!

பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற கலைக் கல்லூரிகளை எல்லாம் அரசே எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம் என அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற கலை கல்லூரிகளை எல்லாம் அரசே எடுத்து கொள்ள முடிவு - அமைச்சர் பொன்முடி
பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற கலை கல்லூரிகளை எல்லாம் அரசே எடுத்து கொள்ள முடிவு - அமைச்சர் பொன்முடி

By

Published : May 9, 2022, 3:10 PM IST

சென்னை : பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற கலைக் கல்லூரிகளை எல்லாம் அரசே எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டுத்தொடர் கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பிய சட்டபேரவை உறுப்பினர் கோ.தளபதி, “மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், தல்லாகுளத்தில் 1 கலைக் கல்லூரி உள்ளது. அதை அரசு கலைக் கல்லூரியாக மாற்றினால் ஏழை மக்களுக்கு உதவியாக இருக்கும். அரசு இதை எடுத்துக்கொள்ள முன்வருமா” என கேள்வி எழுப்பினார்.

இதற்குப்பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற கலைக்கல்லூரிகளை எல்லாம் அரசே எடுத்து கொள்ள முடிவு செய்துள்ளோம். நீங்க கூட ஒன்னு சொல்லியிருக்கீங்க” என சபாநாயகரை நோக்கி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கு சபாநாயகர் அப்பாவு, ’’இந்த ஆண்டே? இந்த ஆண்டே’’ எனக் கேட்டார்.

பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற கலைக் கல்லூரிகளை எல்லாம் அரசே எடுத்துக்கொள்ள முடிவு - அமைச்சர் பொன்முடி
அதற்கு அமைச்சர் பொன்முடி, “இந்த ஆண்டே உங்களுக்கு வேணுமா? நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : நடப்பாண்டில் 10 பிஎச்டி கல்லூரிகள் தொடங்கப்படும் - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி உறுதி

ABOUT THE AUTHOR

...view details