சென்னை: ஆவடி கோவில் பதாகை கலைஞர் நகர் 15ஆவது தெருவைச் சேர்ந்தவர், ரோஜா (64). இவர் கணவரை இழந்து தன் மகன் சங்கர் ராஜ் (41), மருமகள் அனிதா (36) மற்றும் பேர பிள்ளைகள் கீர்த்திகா (11), கெளதம் (10) என்பவர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19ம் தேதி இரவு வீட்டில் ரோஜா அடுப்பை ஆன் செய்த போது கியாஸ் கசிவு காரணமாக திடீரென வீட்டில் இருந்த சமையல் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்தது.
இந்த விபத்தில் ரோஜா, மகன் சங்கர் ராஜ், பேத்தி கீர்த்திகா என்பவர்கள் மேல் தீ பற்றியது. இந்த தீ விபத்தில் ரோஜா 80% காயங்களுடனும், சங்கர் என்பவருக்கு 30% மார்பில் காயங்களுடனும், பேத்தி கீர்த்திகா என்பவருக்கு கால், முகத்தில் 30% காயங்களுடன் பேரன் கௌதம்-க்கு காலில் சிறிய அளவும் தீக்காயம் ஏற்பட்டது. தீக்காயம் பட்டவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி ரோஜா உயிரிழந்தார்.