சென்னை: குரோம்பேட்டை அருகே அஸ்தினாபுரம் புறநானூறு தெருவைச் சேர்ந்த சசிகலா என்பவரின் மகள் சஞ்சனா (13). புறநகர் பகுதிகளில் நேற்றிரவு (ஜுன் 07) மிதமான மழை பெய்தது. அப்போது, சஞ்சனா தன்னுடைய வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
மாடியின் மேல் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கு இரும்பு குழாயில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை அறியாத சஞ்சனா எதிர்பாராத விதமாக இரும்புக் கம்பியைப் பிடித்தபோது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.