சென்னை:வடக்கு கடற்கரை காவல் நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கி எதிரே, ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவில் பயணித்த இளைஞர் ஒருவரை போலிசார் விசாரணை செய்தனர்.
அப்போது, அந்த இளைஞர் கையில் வைத்திருந்த பை குறித்துக் கேட்ட போது, அவர் ஆட்டோவில் இருந்து எகிறிக் குதித்து பையுடன் ஓடியுள்ளார். சிறிது தூரம் சென்றதும், அவர் கையில் வைத்திருந்த பையைக் கீழே போட்டுவிட்டு கடற்கரை ரயில் நிலையத்திற்குள் ஓடிச் சென்று, அங்குச் சென்று கொண்டிருந்த ரயிலில் ஏறித் தப்பியுள்ளார்.
மேலும், இளைஞர் கீழே விட்டுச் சென்ற பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் மூன்று தங்கக் கட்டிகள் சுமார் 2 கிலோ அளவிலிருந்துள்ளன. அதைக் கைப்பற்றிய வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Chennai Local Train: மின்சார ரயிலில் மயங்கி விழுந்து பெண் பலி.. மெரினா பீச் பானி பூரி, சுண்டல் காரணமா?
இதே போல், சென்னை சோழவரத்தில் கார் ஒன்றில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை, சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 4 பேரைக் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே, காரில் கஞ்சா கடத்தி வருவதாக சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் சோழவரம் அருகே மாருதி ஸ்விப்ட்(Maruti swift) காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, டிக்கியில் 40 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த 40 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்டோரைக் கைது செய்தனர். மேலும், அவர்களைச் சென்னை இராயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விசாரணையில், கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த முத்துவேல், வினோத், மேற்கு தாம்பரத்தை சேர்ந்த சதியா, கார்த்திக் ஆகிய நான்கு பேரும், ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து அதை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி முழுவதும் விற்பனை செய்பவர்கள் என தெரியவந்தது.
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் புகைப்படம் இதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து 1 கார், இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் 40 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, அந்த 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தமிழக காவல்துறையில் ஆண்டுக்கு 300 காவலர்கள் மரணம்: டிஜிபி சைலேந்திரபாபு ஷாக் ரிப்போர்ட்!