தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டுக்கோழிகளை அபேஸ் செய்யும் குடும்பம்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு! - சென்னையில் கோழிகள் திருட்டு

அம்பத்தூரில் சொகுசு காரில் வந்து ஆடு திருடும் கும்பலை காவல்துறையினர் தேடிவந்த நிலையில், அதே கும்பல் நாட்டுக்கோழிகளை திருடி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

நாட்டுக்கோழி திருடிய குடும்பம்
நாட்டுக்கோழி திருடிய குடும்பம்

By

Published : Jun 11, 2021, 9:25 PM IST

சென்னை: பாடி வள்ளலார் தெரு ஜெகதாம்பிகை நகர் பகுதியில், பூபாலன் என்பவர் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டுக்கோழிகள் காணவில்லை என, கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதியிடம் புகார் அளித்திருந்தார்.

அப்புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது குடும்பல் ஒன்று காரில் வந்து கூண்டின் பூட்டை உடைத்து நாட்டுக்கோழிகளை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

நாட்டுக்கோழி திருடிய குடும்பம்

ஏற்கனவே கொரட்டூர் பகுதியில் சொகுசு காரில் வந்து ஆடு திருடிய அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான், கோழிகளையும் திருடுகின்றனர் என்பதை உறுதி செய்த காவல்துறையினர், சொகுசு காரில் ஆடு, கோழிகளை திருடும் குடும்பத்தைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:பாக்கெட் சாராயம் கடத்திவந்த லாரி ஓட்டுநர் கைது!

ABOUT THE AUTHOR

...view details