சென்னை அண்ணா நகர், அரும்பாக்கம், அமைந்தக்கரை, திருமங்கலம், கொளத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கடைகளில் ஷட்டரை உடைத்து கொள்ளைப் போவதாக சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் தொடர்ந்து புகார் பதிவான வண்ணம் இருந்தன. இதையடுத்து அண்ணாநகர் துணைஆணையர் சுதாகர் தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்நிலையில் மே.10ஆம் தேதி அண்ணாநகரில் உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஷட்டரை உடைத்து கொள்ளையடித்தாக கடை உரிமையாளர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காலையில் மாஸ்டர்... இரவில் 420... போலீசில் சிக்கிய பலே திருடன்! - கொள்ளையன் கைது
சென்னை: காலையில் சமையல் மாஸ்டர், இரவில் கொள்ளையன் என இரண்டு வேடங்களில் சுற்றி வந்த பலே கில்லாடியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த புகாரும் தனிப்படை காவலர்களுக்கு மாற்றப்பட்டது. இதைதொடர்ந்து கொள்ளை நடந்த இடத்திற்கு சென்ற தனிப்படை காவலர்கள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஏற்கனவே பதிவான நபரின் உருவத்துடன் ஒத்துபோனது. மேலும் கொள்ளையில் ஈடுபட்ட அந்த நபர், அண்ணாநகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அண்ணாநகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று தனிப்படை காவலர்கள் மாறுவேடத்தில் சென்றனர். அப்போது அங்கு வந்த கொள்ளையனை தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அரியலூர் மாவட்டம் பழமலையை சேர்ந்த சிவா என்பதும், திருமங்கலத்தில் உள்ள பிரபல உணவகத்தில் சமையல் மாஸ்டராக இருந்ததும், அவருக்கு பிறவியில் இருந்தே வாய் பேச முடியாது என்பதும் தெரியவந்தது. கடந்த ஆறுமாதங்களாக சென்னையில் தங்கியுள்ள சிவா, காலையில் மாஸ்டர் வேலைப் பார்த்து விட்டு, இரவில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு கொள்ளையடித்தப் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து வந்தது தெரியவந்துள்ளது. கொள்ளையில் ஈடுபடுவதற்காக மெட்ரோ ரயிலில் மாதந்திர பாஸூம் எடுத்து வைத்திருந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.