சென்னையில் ஒரே நாளில் ஒன்பது இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது மக்களிடயே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இன்று செயின் பறிப்பு சம்பவங்களுக்கு காரணமான ராகேஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
செயின் பறிப்பு... 36 மணி நேரத்தில் கைது செய்துள்ளோம்: மயிலாப்பூர் துணை ஆணையர் - இருசக்கர வாகனம்
சென்னை: தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை 36 மணி நேரத்தில் கைது செய்துள்ளோம் என மயிலாப்பூர் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மயிலாப்பூர் துணை ஆணையர் மயில்வாகனன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "திருமங்கலம் உள்ளிட்ட சென்னையில் உள்ள ஒன்பது இடங்களில் செயின் பறிப்பு செயல்களில் ஈடுபட்டவந்த நபரை 36 மணி நேரத்தில் கைது செய்துள்ளோம். சிசிடிவி காட்சிகள் குற்றவாளிகளை கைது செய்ய மிகவும் உதவியாக இருந்தது.
ஐஸ்ஹவுஸ் பகுதிகளில் மட்டுமல்லாமல் பெரும்பாலான இடங்களில் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. அதனால் குற்றவாளியை விரைவாக பிடிக்க முடிந்தது. ஒரே நாளில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் காலை எட்டு மணிக்கும், ராயபேட்டை, கோட்டூர்புரம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர் மீது கொலை வழக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இவர்கள் இருவர் மட்டுமே ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அதில் ராகேஷ் என்ற இளைஞரை கைது செய்துள்ளோம். மற்றொருவர் தேடப்பட்டு வருகிறார். இந்த சம்பவங்களுக்கு ஈடுபடுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது". என்று கூறினார்.