சென்னை: சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா (21). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னிஷியனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த 21.05.2021 அன்று மதியம் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு எதிரே உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது ஈ.வே.ரா பெரியார் சாலை வழியாக வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக யமுனா மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்டதில் யமுனா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக யமுனாவை மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இந்த நிலையில் ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டதால் யமுனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் நிற்காமல் அதி வேகமாக சென்று அருகில் உள்ள கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை வழியாக செல்ல முற்பட்டது.
இதையும் படிங்க:சென்னை குற்றச்செய்திகள்: சிறையில் இருக்கும் இளைஞரை 3 ஆண்டுகளாகத் தேடிய போலீசார்..! மாடியிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு..!
அப்போது, பொதுமக்கள் காரை மடக்கி பிடித்து, காரை ஓட்டி வந்த அப்துல் கவுஹீம் என்பவரை கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்துல் கவுஹீமிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கார் ஓட்டுநரான அப்துல் கவுஹீம், சங்கம் சினிமா குழுமத்தின் முன்னாள் துணை தலைவர் என்பதும், அவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதிற்காக 5 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனையோடு 20 ஆயிரம் அபராதமும் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதுவரை ஜாமினில் வெளியே இந்த நபரை தற்போழுது போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:'மக்களுடன் முதல்வர்' திட்டம் மக்களுக்கு பயனளிக்காது - பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்..!