பெருகிவரும் நீர்த்தேவையினை இயற்கையான முறையில் நிறைவு செய்ய தமிழகத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு முறை ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இனி அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் சமையலறை மற்றும் கழிவறைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படும் நீரினை மறுசுழற்சி செய்ய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என விதிகள் மாற்றியமைப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகம், தனியார் நிறுவனங்களின் கட்டுமான திட்டங்களில் மறுசுழற்சிக்கான கட்டமைப்புகள் இருந்தால் மட்டுமே ஒப்புதல் வழங்கப்படும் என புதிய விதிகளில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட தனியார் நிறுவனங்களிலும் நீர் மறுசுழற்சி கட்டமைப்புகளை உருவாக்க சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவுறுத்தியுள்ளது.