தமிழ்நாடு

tamil nadu

வேடசந்தூரில் அலுவலகக் கட்டடம்: முதலமைச்சர் திறந்துவைப்பு

By

Published : Oct 6, 2020, 12:57 PM IST

சென்னை: வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் (பகுதி) அலுவலகத்தில் 1 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.06) காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.

cm
cm

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள் (போக்குவரத்து) துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் (பகுதி) அலுவலகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை திறந்துவைத்தார்.

2018-2019ஆம் ஆண்டிற்கான உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் இயக்கூர்திகள் சட்டங்கள் மற்றும் நிர்வாக மானியக் கோரிக்கையின்போது, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் (பகுதி) அலுவலகத்திற்கு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய சொந்தக் கட்டடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடத்தை இன்று முதலமைச்சர் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் க.சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே. பிரபாகர், கூடுதல் தலைமைச் செயலர் போக்குவரத்து ஆணையர் தென்காசி சு. ஜவஹர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details