தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

CCTV: வாகனம் நிறுத்துவதில் தகராறு - போலீஸ் விசாரணை - வாகனம் நிறுத்துவதில் தகராறு

ஆவடி அருகே இருசக்கரம் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்டத் தகராறில் இளைஞரை விரட்டி விரட்டி தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Etv Bharat சிசிடிவி காட்சி
Etv Bharat சிசிடிவி காட்சி

By

Published : Sep 19, 2022, 5:14 PM IST

சென்னை:ஆவடி எடுத்த திருமுல்லைவாயில் நேதாஜி நகரைச் சேர்ந்தவர், ரோஷன். இவர், சக்தி நகரில் அரிசிக்கடை நடத்தி வருகிறார். மேலும், அதே பகுதியில் தண்ணீர் கேன்கள் விநியோகித்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு (செப்.18) அதே பகுதியைச்சேர்ந்த பிரசாத் என்பவரது, வீட்டின் எதிரே வாகனத்தை நிறுத்துவதில் அவருக்கும் ரோஷனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் பிரசாந்த், ரோஷனை விரட்டி விரட்டி தாக்கினார். பொதுமக்கள் முன்னிலையில் தாக்கிய நிலையில், விரக்தியடைந்த ரோஷன் அருகே உள்ள ஒரு வீட்டில் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

பின்னர், அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆவடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

சிசிடிவி காட்சி

இச்சம்பவம் குறிதது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ஐடி ஊழியரான பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, தலைமறைவான பிரசாந்தை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பிரசாந்த் ரோஷனை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன

இதையும் படிங்க:உளுந்தூர்பேட்டையில் இரவு நேரங்களில் திருட்டு... சிசிடிவி காட்சியில் மர்ம நபர்...

ABOUT THE AUTHOR

...view details