தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

LIKE க்கு ஆசைப்பட்டு LIFE யை தொலைக்கும் இளைஞர்கள்… நடவடிக்கை எடுக்குமா அரசு..? - LIKE

பயணிகள் ஆச்சரியமாக தங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும், சமூக வலைதளங்களில் அதிக லைக்குகள் பெற வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்கள், மாணவர்கள் சென்னை புறநகர் ரயிலில் உயிருக்கு ஆபத்தான முறையில் விபரீத பயணம் மேற்கொள்வது வாடிக்கையாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்க்க வாலிபர்கள் மேற்கொள்ளும் விபரீத பயணம்
சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்க்க வாலிபர்கள் மேற்கொள்ளும் விபரீத பயணம்

By

Published : Dec 3, 2022, 12:58 PM IST

சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உடன் பயிலும் மாணவர்களுக்காகவும், தங்களோடு பயணிக்கும் நபர்கள் ஆச்சரியமாகப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும், பேருந்து மற்றும் ரயில்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொள்வது மட்டுமல்லாது, சமூக வலைதளங்களில் அவ்வாறு பயணித்த வீடியோவை வெளியிட்டு அதிக லைக்குகள் பெற வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் போது காவல்துறை கவனத்திற்கு வந்த பிறகே போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்து அறிவுரை வழங்கி எச்சரிக்கை செய்து மட்டும் அனுப்புகின்றனர்.

கடுமையான தண்டனை இல்லாத காரணத்தினால் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதுபோன்று ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை புறநகர் ரயிலில் வாலிபர்கள் சிலர், கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் கிளம்பிச் செல்லும்போது நடைமேடைகளில் காலை தேய்த்துக் கொண்டே ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

மேலும் புறநகர் ரயில் வேகமாக ஓடும்போது ரயிலின் வெளிப்புறம் தொங்கிய படியும், நடனமாடியும் உயிருக்கு மிகவும் ஆபத்தான வகையில் மற்றொரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளனர். ஐஎம்சி பிரவீன் என்ற இன்ஸ்டாகிராம் பெயரில் இந்த வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றன.

இந்த வீடியோவை பார்க்கும் மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்க்க வாலிபர்கள் மேற்கொள்ளும் விபரீத பயணம்

இதையும் படிங்க:சாலையில் சுற்றித் திரியும் மாடுகள்.. 8 லட்சம் அபராதம் வசூல்

ABOUT THE AUTHOR

...view details