தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்தவர் காதலியுடன் 20 நாள் பழக்கம் - போட்டுத்தள்ளிய காதலன்! - சென்னை

தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மெயின் தெருவை சேர்ந்த தங்கம் என்கிற தங்கராஜ்(28) என்ற வாலிபர் கடந்த 10 ஆம் தேதி அவரது வீட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆர்கே நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

thandayarpettai-murder-case-three-were-arrested
இன்னொருவர் காதலியுடன் 20 நாள் பழக்கம் வைத்த நபர்: போட்டுத்தள்ளிய காதலன்!

By

Published : Jul 11, 2021, 1:11 PM IST

சென்னை:கொலை செய்யப்பட்ட தங்கம் நேதாஜி நகரில் உள்ள வீட்டிற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு குடிவந்துள்ளார். அங்கு முதல் தளத்தில் வசித்து வந்த அவருக்கு தரைதளத்தில் வசித்து வரும் அப்பு, அவருடைய மனைவி மோனிசா உடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

காதலன் தகராறு

மோனிசாவின் தோழியான திருவொற்றியூரை சேர்ந்த விக்டோரியா அடிக்கடி மோனிசாவை பார்க்க வரும்போது அவருக்கும், தங்கத்திற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், விக்டோரியா தங்கத்திற்கு அடிக்கடி செலவிற்கு பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த விக்டோரியாவின் காதலரான பாலாஜி என்கிற அரைசட்டை பாலாஜி தங்கத்திடம் தட்டிகேட்டு சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் விக்டோரியா, மோனிசா வீட்டிற்கு வந்துவிட்டு தங்கத்தையும் பார்த்துவிட்டு சென்றுள்ளார். அவர் சென்ற பிறகு மோனிசா வீட்டில் இருந்த செல்போன், பணம் காணமால் போனது.

கொலை நடந்த அன்று விக்டோரியாவும், மோனிசாவும் ஆர்கே நகர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பணம், செல்போன் காணாமல் போனது தொடர்பாக சண்டையிட்டுள்ளனர். இதில், மோனிசாவிற்கு ஆதரவாக அவருடைய கணவர் அப்பு, அப்புவின் நண்பர் ஷ்யாம், அரைசட்டை பாலாஜி உட்பட சிலரும், விக்டோரியாவிற்கு ஆதரவாக தங்கம், உள்ளிட்டோர் வந்ததாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் - கொலை

மோனிசா உடன் சண்டை முடிந்த நிலையில், விக்டோரியா நண்பர் ஒருவருடன் கொடுங்கையூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட, தங்கம் அவருடைய வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனிடையே மோனிசா, அவருடைய கணவர் அப்பு, அப்புவின் சகோதரரான மற்றொரு அப்பு, ஷ்யாம், அரைசட்டை பாலாஜி ஆகியோர் மோனிசாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு தனியாக இருந்த தங்கத்திடம் விக்டோரியாவின் காதலரான அரைசட்டை பாலாஜி விக்டோரியாவின் பழக்கத்தை கைவிட வலியுறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில், இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அரைசட்டை பாலாஜி, தன்னுடன் வந்தவர்களின் உதவியுடன் தங்கத்தை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மோனிசாவின் கணவரான அப்பு, ஷ்யாம், அரைசட்டை பாலாஜி உள்ளிட்டோரை கைது செய்தனர். இதில் அப்பு, ஷ்யாம் ஆகியோர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும் அரைசட்டை பாலாஜி மீது அடிதடி, வழப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பழனியில் கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ABOUT THE AUTHOR

...view details