தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 ஹால்டிக்கெட் வெளியீடு.. 30 விண்ணப்பங்கள் நிராகரிப்பு.. - ஹால்டிக்கெட்

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டுக்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

TNTET Exam
TNTET Exam

By

Published : Jan 28, 2023, 6:37 AM IST

Updated : Jan 28, 2023, 9:35 AM IST

சென்னை:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ஆம் ஆண்டிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை 2022 மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 26ஆம் தேதி வரையில் பெறப்பட்டது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள் 2-ற்கு உரிய தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்தப்பட உள்ளது. கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2, பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தேர்விற்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் தேர்விற்கும் மூன்று நாட்கள் முன்னதாக அவர்களுக்கான தேர்வு கூட ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வர்களுக்கு எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன. எந்த தேர்வு மையம் என்பது மூன்று நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும். ஹால்டிக்கெட்டில் தேர்வு மையங்களை மாற்ற வேண்டுமென கூறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேவர்கள் தங்களின் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்டில் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முடிவே இறுதியானது. தேர்வை எப்பொழுது வேண்டுமானாலும் ரத்து செய்யவும், ஒத்தி வைக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அதிகாரம் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டை எழுதுவதற்கு விண்ணப்பித்த 30 நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. அந்த வகையில் பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 9 பேரும், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றுக்கு நடைபெற்ற தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேரும், விண்ணப்பித்தினை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் புகைப்படம் ஒட்டாமலும், கையொப்பம் போடாமல் இருப்பது உள்ளிட்டவை சார்ந்து 21 பேரும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Job Alert:வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி:விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு!

Last Updated : Jan 28, 2023, 9:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details