சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் நேதாஜி நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் ரவி (43). இவர் முடிச்சூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பது, கட்ட பஞ்சாயத்து செய்வது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், ரவி தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த போது அங்கு வந்த ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு ரவியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனைக் கண்ட பொதுமக்கள் உடனே ரவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.