சென்னை: தாம்பரம் - மதுரவாயல் சாலையில் ஃபிலிம் டெக்கார்ஸ் (FILM DECORS) என்ற படப்பிடிப்பு, திருமணங்களுக்கு செட் அமைக்கும் நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது.
இங்கு செட் அமைக்கத் தேவையான பிளாஸ்டிக் பொருள்கள், மேட் போன்ற பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று (ஆக.4) இங்கு புகைமூட்டம் காணப்பட்ட நிலையில், திடீரென குடோன் முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. குடோனைத் தொடர்ந்து அருகே உள்ள பழைய கார் உதிரி பாகங்கள் விற்பனைகத்திலும் தீ பரவியது. இதனையடுத்து அங்கிருந்த நிறுவன ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர்.