சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்கள், அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பணியாளர்களில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியோர் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
பள்ளிக்கல்வித்துறையில் 10 ஆயிரம் பேர் பணியிடமாற்றம் - transfer
பள்ளிக்கல்வித்துறையில் மூன்று ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில் பணியாற்றிய 10,000 பேர் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி மாநிலம் முழுவதும் பத்தாயிரம் பேர் மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருவது கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரையும் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்வதற்கான கலந்தாய்வு இன்று (செப் 27) தொடங்கியது. அந்த வகையில் மாவட்டத்திற்குள் பணியிட மாறுதலுக்கு இன்றும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு நாளையும் பணியிட மாற்றத்திற்கு 10 ஆயிரம் பேரும் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்... 2 பேர் கைது...