சென்னை:கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்கள், அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (செப்.13) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அதில், ”சமய நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருவதால், 1959ஆம் ஆண்டு 79b இந்து சமயம் மற்றும் அறநிலையச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்து சமய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர் கடுமையான குற்றம் செய்தவராகக் கருதப்படுவார்.