நாடு முழுவதும் கோடைக்காலம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த நீண்டகால முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியீட்டின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
அதில், வடக்கு, வட மேற்கு, வட கிழக்கு மாநிலங்களில் இந்தாண்டு மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகரித்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.