சென்னை: வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் (30). இவருக்கு திருமணமாகி தேவபிரியா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது விவேக், அயனாவரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மேலும், எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள இணைய சேவை வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் பணிக்கு வந்த விவேக்-ஐ அவர் பணியாற்றும் அலுவலகத்தில் வைத்து ஒருவர் திடீரென கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க விவேக், ஓடியபோதும் விடாமல் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அருகிலிருந்த பொதுமக்கள் எழும்பூர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், உடனடியாக திருவல்லிக்கேணி துணை ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது கொலை செய்துவிட்டு மாடி வழியாக தப்பிக்க முயன்ற கொலையாளியை காவல் துறையினர் மாடிக்குச சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (24) என்பது தெரியவந்துள்ளது.
சந்தோஷ் நான்கு மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் அதே அலுவலகத்தில் பணியாற்றி வருவதும், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சந்தோஷ் சீக்கிரமாக வீட்டிற்குச் செல்ல வேண்டும் என விவேக்கிடம் தெரிவித்த போது, பணி முடிக்காமல் வீட்டிற்குச் செல்ல வேண்டாம் என சந்தோஷை, விவேக் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.