தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சென்னையில் 50% பணியாளர்களுடன் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் இயங்கலாம்' - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் 50% பணியாளர்களுடன் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் வருகின்ற 13ஆம் தேதியிலிருந்து இயங்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Technology based companies rannig with 50% employees in Chennai
Technology based companies rannig with 50% employees in Chennai

By

Published : Jul 11, 2020, 7:12 AM IST

தமிழ்நாடு அரசு கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் விழுக்காடு நாட்டிலேயே அதிகமாகவும் , நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது .

இது குறித்து தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்டப் பகுதிகளில், ஏற்கெனவே பல பணிகளுக்கு அனுமதி அளித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தளர்வுகளுடனும் இந்த ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள், பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

தற்போது உள்ள நடைமுறைப்படி பணியாற்றுவதில் உள்ள சிரமத்தினை தெரிவித்தார்கள். தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள், பணியாளர்களின் சிரமங்களைக் களையும் வகையில் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்டப் பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர (Except Containment Zones) மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் ஜூலை 13ஆம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

எனினும் , இதில் பெரும்பாலான பணியாளர்கள் அந்நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பொது போக்குவரத்து வசதிகளை மட்டுமே உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் முடிந்த வரையில், தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய (Work from Home ) ஊக்குவிக்க வேண்டும்.

தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் பணியாளர்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்திக் கைகளை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக்கவசத்தை அணிந்து செல்வதையும், தகுந்த இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடித்து தேவையில்லாமல் வெளியில் செல்வதையும் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details