தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்திட, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு அவசியமான மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு, முன்னதாக மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழ்நாடு தற்சார்பு அடைவதற்கான வழிமுறைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 11ஆம் தேதி விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்த தற்போதுகுழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.