தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மாணவர்களுக்கு பாலினப்பாகுபாடு குறித்த ஆலோசனையைத் தாருங்கள்' - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம்

பாலின பாகுபாடு குறித்து மாணவர்களுக்கு கல்வி  Teachers should give awareness to sexual education  School Education New announcement
School Education New announcement

By

Published : Mar 11, 2020, 4:35 PM IST

Updated : Mar 11, 2020, 5:00 PM IST

16:22 March 11

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குப் பாலினப் பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குப் பாலின பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், '2019-20ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 556 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 89 ஆயிரத்து 140 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இணையப் பாதுகாப்பு, உடல் மற்றும் மன நலப் பாதுகாப்பு, பாலினப் பாகுபாடு, வளரிளம் பருவக் கல்வி, சுய விழிப்புணர்வு, பிறர் மனநிலை அறிந்து செயல்படுதல், மன அழுத்தம் மற்றும் மன எழுச்சிகளை கையாளும் திறன் போன்றவை குறித்தும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல் வேண்டும்.

உடல் நலம் மற்றும் சுகாதார பயிற்சி வழங்குதல் வேண்டும். மாணவர்களுக்கு நன்னெறி மற்றும் ஒழுக்கத்தின் மதிப்பை எடுத்துக் கூறி, அவர்களிடம் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நிலை நிறுத்துதல் வேண்டும். அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களிடம் உள்ள பயத்தின் காரணமாக, கடந்த ஆண்டு அதிகப்படியான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  

அந்த பயத்தை நீக்கும் வகையில் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பின்பு உள்ள மேற்படிப்புகள், வேலைவாய்ப்புகள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சமுதாயத்தில் ஏமாற்றுபவர்கள் இடம் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது மற்றும் தவறாக வழிநடத்தும் நபர்களை எவ்வாறு இனம் கண்டு கொள்வது என்பது பற்றியும், சரியான தொடுதல், தவறான தொடுதல் என்பது பற்றியும், ஒரு உறவினர் அல்லது நண்பர் எந்த முறையில் நம்மோடு பழகுகிறார், அவருடைய செயல்பாடுகளில் வேண்டும் செயல்கள், வேண்டாதவை  எவை என்பதைக் கண்டு உணர்ந்து, தெரிந்து கொள்வது பற்றி அறிவுறுத்த வேண்டும்.

மாணவர்கள் செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், எல்லா நேரங்களிலும் செல்போன்களைப் பயன்படுத்தி நேரத்தை வீணடிக்காமல் உரிய நேரத்தில் பயன்படுத்துவது பற்றியும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். 

பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை ஒரு நாள் பள்ளிக்கு வரவழைத்து மாணவர்களின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இயற்கை இடர்பாடுகளில் இருந்து மாணவர்களைப் பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் கருத்துகளை, புகார்களைத் தெரிவிக்கும் வகையில், அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் புகார்ப் பெட்டி வைக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை ஆய்வு செய்து தேவையேற்படின் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்தச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் 
 

Last Updated : Mar 11, 2020, 5:00 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details