இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017- 18 ஆம் ஆண்டிற்கான அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் 186 பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கு அறிவிப்பு 18.7.2018 அன்று வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து தகுதியுள்ளவர்களுக்கு 25 .2 .2019 அன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவை நடத்தப்பட்டது.
உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 186 பேர் பட்டியல் வெளியீடு!
சென்னை: சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 186 பேர் பட்டியல் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 186 பேர் பட்டியல் வெளியீடு
இந்நிலையில் 186 காலி பணியிடத்திற்கு தகுதி உள்ளவர்களில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பணி நியமனம் அந்த துறையால் வழங்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.